இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதங்கள் படி டொலரின் விற்பனை விலை 365.09 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை இன்று டொலரின் கொள்வனவு விலை 355.77 ரூபாய் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
டொலரின் விற்பனை விலை நேற்று (31) 365.74 ரூபாயாக பதிவாகிய நிலையில் ரூபாயின் மதிப்பு 65 சதம் மேலும் உயர்ந்துள்ளது.
இதேவேளை ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்விலை 445.60 ரூபாயாகவும் விற்பனை விலை 461.11 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்விலை 381.42 ஆகவும் விற்பனை விலை 392.25 ரூபாயாகவும் அவுஸ்ரேலிய டொலரின் கொள்ளவில்லை 252.69 ஆகவும் விற்பனை விலை 264.07 ஆகவும் பதிவாகியுள்ளது.