ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான 2022 கால்பந்து உலகக்கிண்ண ஐரோப்பிய தகுதிப் போட்டியில், உக்ரைன் அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
ஹாம்ப்டன் பார்க் விளையாட்டரங்களில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பிளே- ஒஃப் அரையிறுதிப் போட்டியில், உக்ரைன் அணியும் ஸ்கொட்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், உக்ரைன் அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதில் உக்ரைன் அணி சார்பில், ஆண்ட்ரி யார்மோலென்கோ 33ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ரோமன் யாரேம்சுக் 49ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஆர்டெம் டோவ்பிக் 95ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
ஸ்கொட்லாந்து அணி சார்பில், கால்ம் மெக்ரிகர் 79ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
ஏற்கனவே போர்துக்கல் மற்றும் போலந்து அணிகள் கால்பந்து உலகக்கிண்ணத் தொடருக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கிண்ண தகுதிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், உக்ரைன் அணி, வேல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.