மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை (6) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபை அடையும் நஷ்டத்தை குறைக்கும் நோக்கில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் கூறியுள்ளார்.
தற்போது இலங்கை மின்சார சபையின் வருடாந்த வருமானம் 276 பில்லியனாக இருக்கும் அதேவேளை செலவு 750 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இன்று சனிக்கிழமை ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கி உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இருப்பினும் நாளை ஞாயிற்றுக்கிழமை (5) மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.