ஊதியப் பிரச்னை தொடர்பாக ஆயிரக்கணக்கான தபால் துறை ஊழியர்கள் இன்று (சனிக்கிழமை) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக நிறுவனத்திற்குச் சொந்தமான கிரவுன் தபால் அலுவலகங்கள், 24 மணிநேர காலத்திற்கு மூடப்படும். அதே நேரத்தில் துணை தபால் நிலையங்களில் பண விநியோகம் அல்லது வசூல் இருக்காது.
2021-22இல் ஊதிய முடக்கம் மற்றும் அடுத்த ஆண்டு 2 சதவீத உயர்வு குறித்து தகவல் தொடர்பு பணியாளர் சங்கம் கோபமடைந்துள்ளது. இந்த நிலையில், தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் 11,000 கிளைகளில் பெரும்பாலானவை வேலைநிறுத்தத்தால் மூடப்படவில்லை என்றும் வழக்கம் போல் திறக்கப்படும் என்றும் தபால் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுமார் 3,500 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மே மாத தொடக்கத்தில் ஏற்கனவே வேலைநிறுத்தம் நடைபெற்றது. மேலும் திங்களன்று வெளிநடப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.