பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில், நோர்வேயின் காஸ்பர் ரூட் மற்றும் ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகியோர் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிப் போட்டியில், நோர்வேயின் காஸ்பர் ரூட், குரேஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நோர்வேயின் காஸ்பர் ரூட், 3-6, 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் நோர்வே வீரர் என்ற பெருமையை காஸ்பர் ரூட் பெற்றார்.
———————————————————————————————————————————————————
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் ரபேல் நடால், ஜேர்மனியின் அலெக்ஸெண்டர் ஸ்வெரவ்வுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஸ்பெயினின் ரபேல் நடால், 7-6, 6-6 என்ற நிலையில் இருந்த போது, கால் உபாதைக் காரணமாக அலெக்ஸெண்டர் ஸ்வெரவ் போட்டியின் இடைநடுவே வெளியேறினார். இதனால், ரபேல் நடால் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
இதன்மூலம் 30ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற இறுதிப் போட்டிக்கு நடால் முன்னேறியுள்ளார். இதில் 31 முறை ஜோகோவிச்சும் பெடரரும் முன்னேறியுள்ளனர்.
இதுதவிர, பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு 14ஆவது முறையாக நடால் முன்னேறியுள்ளார்.