உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இரு மதத்தினர் இடையே நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. பெண் ஊடகப்பேச்சாளர் நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை வெளியிட்டதை அடுத்து வன்முறை பதிவாகியது.
இந்த வன்முறை தொடர்பாக 800 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என கான்பூர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் தற்போது அமைதி நிலவுவதாகவும், அந்தப் பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.