வட கொரியா தனது கிழக்குக் கடற்கரையில் உள்ள கடலை நோக்கி எட்டு குறுகிய தூர ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது.
தென் கொரியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் நாடுகள் இணைந்து கடற்படை பயிற்சிகளை முடித்த ஒரு நாட்களின் பின்னர் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது.
வடகொரிய தலைநகரின் சுனான் பகுதியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென் கொரியா கூட்டுப்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை சந்தேகத்திற்கு இடமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவிவிட்டதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் வட கொரியா நடத்திய 18 வது சுற்று ஏவுகணை சோதனை இது என தெரிவிக்கப்படுகின்றது.