நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 101 புதிய வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு அமைச்சரவைப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார்.
பன்னிப்பிட்டியவிலுள்ள “வியத்புர” வீடமைப்புத் திட்டத்தில் இருந்து வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளஅதேவேளை அதன் மதிப்பு தோராயமாக 1795 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மடிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதி பாழடைந்து வரும் நிலையில், அந்த வீடுகளுக்கு போதிய இடவசதி இல்லையெனவும் அதற்கு மாற்றாக இந்த வீட்டுத் தொகுதிகளை வழங்க அமைச்சரவைப் பத்திரம் பரிந்துரைக்கிறது.
மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையால் வீடுகள் சேதமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக நடவடிக்கையாக முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை ஒதுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.