ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு சீர்குலைந்து வரும் அபாயகரமான நிலையைக் கண்டு அதிர்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (திங்கட்கிழமை) தனது ருவிட்டரில் இட்டுள்ள பதிவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், “எனது ஆட்சிக் காலத்தில் உங்களுடனான அந்த வரலாற்றுப் பிணைப்பை மேலும் வலுப்படுத்த முடிந்தது என்பதை மிகுந்த மரியாதையுடன் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
நமது ஆழமான வேரூன்றிய வரலாற்று உறவை அச்சுறுத்தும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் இன்று நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.
உலகம் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் வலுவான பிணைப்பு நாம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க பெரும் உதவியாக இருக்கும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
I believe our continued close cooperation would be significant for us in facing the current socio-economic issues arising in the globe. @RusEmbSriLanka
— Maithripala Sirisena (@MaithripalaS) June 6, 2022