கிழக்கு ஈரானிய நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 87பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஈரானிய நகரான தபாஸில் இருந்து யாஸ்ட் நகருக்கு நேற்று (புதன்கிழமை) பயணித்த பயணிகள் ரயில், தபாஸ் நகரிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் தண்டவாளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 13பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 60பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால், தற்போது உயிரிழப்பு- பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.