அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதற்காக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சிவில் சமூக தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் நீதியமைச்சில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் நன்மைகள், ஜனநாயகத்தை வலுப்படுத்துவது மற்றும் நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது எப்படி என்பது குறித்து அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கு இதன்போது விளக்கினார்.
இந்த சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் 50க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.