நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முழுமையான பங்களிப்பு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நீர்மின் உற்பத்தி சிலவற்றின் தொழிற்பாடுகள் செயலிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லக்ஷபான, நவலக்ஷபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர மற்றும் கெனியோன் ஆகிய 5 நீர்மின் நிலையங்களின் மின் உற்பத்தி நடவடிக்கைகளே இவ்வாறு தற்காலிகமாக செயலிழந்துள்ளன.
இதன்காரணமாக குறித்த நீர்மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்க பெறும் 300 மெகாவொட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.