நாட்டில் உணவுப் பாதுகாப்பிறகு முதலிடம் கொடுக்க வேண்டும் என அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டிலே அல்லது உலகிலோ அனைத்து அம்சங்களும் உணவுப் பாதுகாப்பில் தங்கியுள்ளன சுட்டிக்காட்டினார்.
90 களில் தொழில்மயமாக்கலை நோக்கி நகர்த்த முயற்சிகள் மூலம் உருவாக்கப்பட்ட திறந்த சந்தைக் கொள்கை காரணமாக உள்ளூர் விவசாயம் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார்.
பஞ்சம் வரவுள்ளதாக உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது என்றும் இது முழு உலகத்தையும் பாதிக்கும் என்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டார்.
விவசாயத்தில் தன்னிறைவு அடையத் தவறினால், உணவுப் பொருட்களைத் தொடர்ந்து கடனாகப் பெற முடியாத அவல நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இது வெறும் குறுகிய கால நடவடிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அத்தகைய முயற்சியை அடைய அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.