இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 44.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்தோடு யூரோக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 40.7 சதவிகிதமும் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 39.8 சதவிகிதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் ஜப்பானிய யெனுக்கு எதிராக 35.1 சதவிகிதமும் அவுஸ்ரேலிய டொலருக்கு எதிராக 43.1 சதவிகிதமும் வீழ்ச்சி கண்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி இந்திய ரூபாயிற்கு எதிராக நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 41.7 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த மே மாதம் 13ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட அந்நிய செலாவணி ஸ்திரப்படுத்தல் கொள்கை காரணமாக ரூபாயின் பெறுமதி சற்று ஸ்திரத்தன்மையை பெற்றுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.