லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் நாளை முதல் நிறுவனத்தின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விஜித ஹேரத் அண்மையில் இராஜினாமா செய்ததையடுத்து, புதிய தலைவராக முதித பீரிஸை நியமிப்பது சரியான தருணம் என லிட்ரோவின் தொழிற்சங்கங்கள் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.