இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க உலகில் எந்த சக்தியும் இல்லை என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.
உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர், கொரோனா காலத்தில் ஏழை நாடுகளை காக்க உலக வர்த்தக அமைப்பு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் இதனால் ஏற்படும் சவாலை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை மீனவர்களுக்கான மானியத்தை குறைப்பதற்கான உலக வர்த்தக அமைப்பின் முன்மொழிவுக்கு பியூஷ் கோயல் எதிர்ப்பும் வெளியிட்டார்.