நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வொன்றை தேசிய கணக்காய்வு அலுவலகம் ஆரம்பித்துள்ளது.
2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட 3 வருட காலப்பகுதியில் பெறப்பட்ட அரச கடன்கள் தொடர்பாகவே, தேசிய கணக்காய்வு அலுவலகம் இந்த விசேட கணக்காய்வில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட கணக்காய்வு அறிக்கையை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.