மத்தள விமான நிலையம் தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசரமாக தரையிறங்குவதற்கான மேலதிக விமான நிலையமாக மத்தள விமான நிலையத்தை தொடர்ந்து இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் மூடப்பட்டால் விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட வேண்டும் என்பதனால் நஷ்டம் ஏற்பட்டாலும் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.
காட்டு யானைகள் வாழுமிடத்திற்குள் விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையால் மின்சார வேலியை உடைத்துக்கொண்டு காட்டு யானைகள் நுழையும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டினார்.
காட்டு யானை அச்சுறுத்தலுக்கு தீர்வாக மின்சார வேலிக்கும் விமான நிலைய வளாகத்துக்கும் இடைப்பட்ட வெற்று நிலங்களில் பனை மரங்களை வளர்க்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.