பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் இரண்டாவது பதவிக் காலத்திற்கான முக்கிய தேர்தலின் முதல் சுற்றில் பிரான்ஸ் மக்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் மேலவையான தேசிய பேரவைக்கான முதல்கட்ட தேர்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
ஓய்வூதிய வயதை உயர்த்துதல் மற்றும் நன்மைகள் முறையை மாற்றியமைத்தல் போன்ற உள்நாட்டுக் கொள்கைகளை வழங்குவதற்கான அவரது திறனை இந்த தேர்தல் தீர்மானிக்கவுள்ளது.
தீவிர வலதுசாரியின் மரைன் லு பென்னுக்கு எதிராக ஏப்ரலில் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்ரோன், வரிகளைக் குறைப்பதற்கும் நலன்புரி அமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கும் தனது முன்மொழிவுகளுக்கு சுதந்திரமான ஆதரவைப் பெறுவதற்கு நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் மத்தியவாத குழுவிற்கு பெரும்பான்மை தேவை.
577 இடங்களைக் கொண்ட மேலவையான தேசிய பேரவைக்கான முதல்கட்ட தேர்தலில், 18 முதல் 92 வயது வரையிலான 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள், வரும் 19ஆம் திகதி நடைபெறவிருக்கும் இரண்டாம் கட்டத் தேர்தலில் போட்டியிடுவார்கள்.
இமானுவல் மக்ரோனின் இடதுசாரி கூட்டணி வலுவிழந்துள்ள நிலையில், அவருக்கு நாடாளுமன்றத்தில் கூடுதல் பலம் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தச் சூழலில் நடைபெறும் இந்த மேலவை தேர்தல், அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.