அடுத்த ஆண்டுக்கான காகிதம் மற்றும் அச்சுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 65 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கையில் காகித உற்பத்தி இடம்பெறுவதில்லை என்பதனால் இறக்குமதி செய்வதாக கூறியுள்ளார்.
முன்னதாக எம்பிலிப்பிட்டி மற்றும் வாழைச்சேனை தொழிற்சாலைகளில் காகிதஉற்பத்தி இடம்பெற்றதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அச்சகங்கள் மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்துடன் பேசி அடுத்த வருடத்திற்கான தேவைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
65 மில்லியன் அமெரிக்க டொலருக்கான மதிப்பீடுகள் திறைசேரி, வர்த்தக அமைச்சு மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள நிறுவனங்களில் இருந்து தேவையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் கூறிய அமைச்சர், இதற்கு முன்பும் தமிழ்நாட்டிலிருந்து காகிதப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக்க சுட்டிக்காட்டியுள்ளார்.