மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் இந்த நட்டத்தை இலங்கை மின்சார சபையால் தாங்க முடியாது என தெரிவித்தார்.
அதன்படி, மின் கட்டணத்தை எப்படி அதிகரிப்பது என்பது குறித்து அடுத்த சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.
மின்கட்டண உயர்வுக்கான வழிமுறைகள் குறித்து அடுத்த சில நாட்களில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
30 முதல் 60 யுனிட் பயன்படுத்தும் குறைந்த வருமானம் பெறும் நுகர்வோரின் மின் கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்திடம் இருந்து மானியம் பெற்று ஏனைய மின் பாவனையாளர்களின் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.