அமைச்சரவையில் பல தடவைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அங்கீகாரம் வழங்கப்படாத 21வது திருத்தச் சட்டமூலம் இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்தால் அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைபு வர்த்தமானியில் வெளியிடப்படும்.
வரைவில் பல சரத்துக்கள் திருத்தப்பட்டு இன்று மீண்டும் அமைச்சரவையில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்படுகின்றது.
இதேவேளை, 21ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச விடயங்கள் தொடர்பான மார்ச் 12 இயக்கத்தின் தீர்மானம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.