அமெரிக்காவினது கொள்கையின் மையமாக சர்வதேச நாணய நிதியம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு சர்வதேச நாணய நிதியமும் பங்களித்துள்ளதாக தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் காரணமாக, உக்ரைன் நேட்டோவில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நீண்ட கால அடிப்படையில் அரபு நாடுகளிடம் இருந்து எரிபொருளை அல்லது டொலரை பெறுவதற்கான வழிமுறையை கண்டறிய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இலங்கையால் டொலரைப் பாதுகாக்க முடியாது எனவும் எதிர்காலத்தில் வட்டி செலுத்துவதற்கும் டொலர்களை பெற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை உறுதிப்படுத்திய பின்னர் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை ஏன் பெற முடியாது என்றும் வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பினார்.