தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை இறுதி அறிக்கையை ஓகஸ்ட் 3 ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணைக்குழுவை அமைத்து தமிழக அரசு 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதுதொடா்பாக ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் ஊழியர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், மருத்துவா்கள் என பலதரப்பினரிடமும் பல்வேறு கட்டங்களாக விசாரணை இடம்பெற்றது.
இதுவரை 12 முறை ஆறுமுகசாமி ஆணைக்குழுவிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணையும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிா்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கோரி ஆறுமுகசாமி ஆணைக்குழு, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் ஓகஸ்ட் 3 ஆம் திகதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டு அன்றையதினம் இறுதி அறிக்கை சமா்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.