பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் எதிர்வரும் முதலாம் திகதி போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலன் மிராண்டா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசியக் கொள்கையின் 12 அம்சங்களின் கீழ் கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று(செவ்வாய்கிழமை) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
கலந்துரையாடலில் பங்கேற்குமாறு பேருந்து தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த பிரிவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.