மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தற்போது அங்கம் வகிக்கும் சரத் ஏக்கநாயக்க கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.