அடுத்த மாதம் 22 ஆம் திகதி வரை பெட்ரோல் ஏற்றுமதியை பெற்றுக்கொள்ள முடியாது என பிரதமரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் நிதி இருந்தாலும், எரிபொருள் இறக்குமதிக்கு அணுக முடியாது என சாகல ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், டீசல் ஏற்றுமதிக்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவை ஜூலை இரண்டாவது வாரத்தில் நாட்டை வந்தடையும் என்றும் குதெரிவித்தார்.
இலங்கையில் தற்போது 11,000 MT டீசல், 5,000 MT பெட்ரோல், 30,000 MT உலை எண்ணெய் மற்றும் 800 MT விமானத்திற்கான எரிபொருள் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஜூலை 10 ஆம் திகதி வரை நாட்டில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.