இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் சேவைக் காலத்தினை நீடிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரை செய்துள்ளார்.
நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த பரிந்துரையினை முன்வைத்துள்ளார்.
இதற்கமைய இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் சேவைக் காலத்தினை நீடிக்குமாறு பரிந்துரைசெய்து பிரதமர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த மாதம் இறுதியில் பதவியில் இருந்து நீக்கப்படும் திட்டம் இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.