நாட்டின் தேசிய பாதுகாப்பு தற்போது பூஜ்ஜியமாகிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று கருத்து தெரிவித்த அவர், கடந்த சில வாரங்களாக நாட்டில் பதிவாகிய குற்றச் செயல்கள், தேசிய பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது என்றார்.
மேலும் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே ஆளும்கட்சியின் பிரதான தேர்தல் வாக்குறுதியாக இருந்தது என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் இவ்விடயத்தில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசியல்வாதிகள் தாக்குதலை நடத்தியமையின் விளைவினாலேயே அமைதியின்மை ஏற்பட்டது என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.