சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, உறுதியளித்துள்ளார்.
நேற்று பிற்பகல் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே தூதுவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அபிவிருத்தியை நோக்கிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவுவதாகவும் இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
இலங்கையுடன் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை ஜப்பான் தொடர்ந்து பேணும் என்றும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பல ஆண்டுகளாக ஜப்பான் அரசாங்கம் வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் ஜனாதிபதி தனது பாராட்டுக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.















