பிரித்தானியாவின் புதிய நிதி மற்றும் சுகாதார அமைச்சர்களை, பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் துணை அமைப்பாளராக செயல்பட்டு வந்த கிறிஸ் பின்ஷர் அப்பதவியில் இருந்து விலகினார்.
கடந்த வாரம் இரவுநேர கேளிக்கை விடுதியில் இரண்டு ஆண்களுடன் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக கிறிஸ் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து கட்சியின் துணை அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிய அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இருப்பினும் அவர் மீது உடன் நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிவித்து நிதி, சுகாதாரத்துறை அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இதனையடுத்து, நதீம் சஹாவி நிதி அமைச்சராகவும், ஸ்டீவ் பார்க்லே சுகாதார அமைச்சராகவும் செயற்படுவார்கள் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.