நாட்டில் வட – கிழக்கு பகுதிகளில் 95 வீதமான கண்ணிவெடிகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.
தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய 14 சதுர கிலோமீற்றர் நிலப்பகுதியில் மாத்திரமே தற்போது கண்ணிவெடி அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், 2028ஆம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக வருடாந்தம் 17 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகை பெறப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.