நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினையை ஆட்சியாளர்கள் தமக்கு சாதகமாக்கி, மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதாக மருத்துவ நிபுணர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இக்கோரிக்கைக்கு செவிசாய்க்காவிடின் நாட்டின் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக நாடாளாவிய ரீதியில் முழுமையான தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
மேலும் பாரிய அமைதிப் போராட்டங்களை நடாத்துவது குறித்து சிந்திக்குமாறு சகல தரப்பினரிடமும் இலங்கை மருத்துவ நிபுணர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது,
நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மருத்துவ நிபுணர்கள் அமைப்பு மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.