மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து படகு மூலம் இந்தியா செல்ல முயற்சித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உள்ளடங்களாக 9 பேர் கடற்படையினரால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.35 மணியளவில் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்,சிறுவன்,சிறுமி உள்ளடங்களாக 7 பேரும் மன்னாரைச் சேர்ந்த 2 படகோட்டிகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரால் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரனைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்