மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை ஆரம்பமாகிய நடைபெற்றுவரும் நிலையில் விவசாயிகளுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கையினை மட்டக்களப்பு நகரில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் முன்னெடுத்துவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகள் மட்டக்களப்பு நகரில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மு.செல்வராஜாவிடம் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக இந்த எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னுரிமையடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை காலம் தாண்டிச்செல்லும் நிலையில் எரிபொருள் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் அறுவடை செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாத நிலைமை காணப்படுகின்றது.
இதன்காரணமாக வயல்களில் நெற்கதிர்கள் உதிரும் நிலை காணப்படுவதனால் விவசாயிகள் நஸ்டம் அடையும் நிலை காணப்படுவதாகவும் விரைவாக அறுவடைசெய்யவேண்டிய அவசியம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
முறையான ஒழுங்குபடுத்தலின் கீழ் இன்று மட்டக்களப்பு நகரில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக ஏக்கருக்கு 15லீற்றர் என 3000லீற்றர் டீசல்கள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக மட்டக்களப்பு நகரில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மு.செல்வராஜா தெரிவித்தார்.
விவசாயிகளின் நன்மை கருதி முதன்மையடிப்படையில் எரிபொருட்களை தொடர்ச்சியாக வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.