யாழ்ப்பாணத்துக்கும்-கிளிநொச்சிக்கும் இடையே யாழ் ராணி என்ற விசேட ரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரச பணியாளர்கள், யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இச்சேவையை ரயில் திணைக்களம் இன்று ஆரம்பித்துள்ளது.
இதன்படி, காங்கேசன் துறையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் யாழ் ராணி புகையிரதம் காலை 8.11 இக்கு முறிகண்டியை அடையும் என்றும் அங்கிருந்து மீண்டும், காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் புகையிரதம், காலை 11.20 இக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் புகையிரதம் மாலை 4.10 இக்கு முறிகண்டியை வந்தடையும் என்றும் முறிகண்டியிலிருந்து மீண்டும் 4.40 இக்கு புறப்படும் இந்தப் புகையிரதம் இரவு 7.20 இக்கு காங்கேசன்துறையை சென்றடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஒரு வழிக் கட்டணமாக 90 ரூபாய் கட்டணமும் யாழ்ப்பாணத்திலிருந்து பளைக்கு 60 ரூபாயும் யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமத்துக்கு 35 ரூபாயும் கட்டணமாக அறவிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.