சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள் தயாரிப்பில் பிரதமர் மோடி புதிய ஆற்றலைப் புகுத்தியுள்ளதாக தொழில்துறை தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது ‘மன் கி பாத்’ உரையில் இந்தியாவின் சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருட்களை தயாரிக்கும் துறையை மறுசீரமைப்பது பற்றி கவனம் செலுத்தியிருந்தார்.
அத்துடன், அரசாங்கத்தின் மேக்-இன்-இந்தியா முன்முயற்சி திட்டத்தின் ஊடாகவும் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
அதன்பலனாக, குறித்த தொழிற்துறையானது, கடந்த மூன்று ஆண்டுகளில் 61 சதவீத உயர்வு பெற்றுள்ளதோடு இறக்குமதி 70 சதவீதம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப்பொருட்கள் உற்பத்திச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷரத் கபூர் கூறுகையில், பிரதமர் மோடி தொழில்துறையில் புதிய ஆற்றலைப் புகுத்தியுள்ளார். இதன் விளைவாக ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் இறக்குமதி சரிவு ஏற்பட்டுள்ளது’ என்றார்.
அதேநேரம், ‘மன் கி பாத்தின் ஊடாக, பிரதமர் மோடி, இந்தியாவில் உற்பத்தியைப் பற்றி பேசினார். இது எங்கள் தொழில்துறையில் ஆற்றலைத் தூண்டியது. இதனால் பலர் தொழில் முனைவிலும் ஈடுபட்டனர்.
அவரது வார்த்தைகளால் மக்கள் ஈர்க்கப்பட்ட பிறகு பெரிய அளவிலான உற்பத்தி தொடங்கியது’ என கிரியேட்டிவ் கிட்ஸ் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் கபூர் கூறினார்.
‘கடந்த மூன்று ஆண்டுகளில், சீனாவில் இருந்து வரும் மலிவான இறக்குமதிகள், மோசமான தரமுறைய பொருட்களுக்கு அரசாங்கம் சுங்க வரி விதித்தது.
சீனப்பொருட்களின் இறக்குமதியை நிறுத்தியதன் விளைவாக இறக்குமதி 70சதவீதம் குறைந்துள்ளது’ எனவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, 90 சதவீத பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் இப்போது அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாட்டிலிருந்தும் கேள்விகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளர்ர்.
இதேவேளை, சர்வதேச கண்காட்சியின் 13ஆவது பதிப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்புடன் 96கண்காட்சியாளர்களை இந்நிகழ்ச்சி ஈர்த்ததாக கபூர் கூறினார்.
அத்துடன், துபாய், ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் பூட்டான் உட்பட பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எங்களைப் பார்வையிட்டுள்ளனர். அவர்கள் மொத்தமாக உற்பத்திகளைக் கோரியுள்ளனர். நிச்சயமாக எமது ஏற்றுமதி அதிகரிக்கும்’ என்றும் கபூர் கூறினார்.