கார்கில் விஜய் திவாஸ் நினைவாக, வெற்றிச்சுடர் பாரம்பரிய வரவேற்புக்களுக்கு மத்தியில் காஷ்மீரை வந்தடைந்தது.
உதம்பூரை தளமாகக் கொண்ட தலைமையக வடக்கு கட்டளையிலிருந்து வெற்றிச் சுடர் கொடியேற்றப்பட்டு குஜ்ஜார்பட்டியில் உள்ள ஜோராவர் காரிஸனை வந்தடைந்தது.
இந்நிகழ்ச்சியில் இந்திய இராணுவ அதிகாரிகள், சிவில் நிர்வாக அதிகாரிகள், கார்கில் போர் வீரர்கள் மற்றும் வீர நாரிஸ் உள்ளிட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் கார்கில் போரின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த ஆண்டு கார்கில் விஜய் திவாஸ் கொண்டாட்டங்கள் இரண்டு வழிகளில் தனித்துவமானது, ஏனெனில் கார்கில் விஜய் திவாஸ் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக உள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கார்கில் போர் வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், தாய்நாட்டின் சேவைக்கு அவர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பும் நினைவு கூரப்பட்டது.
இந்நிகழ்ச்சியானது, இளைய தலைமுறையினருக்கு, பாகிஸ்தானின் மீது இந்திய ஆயுதப் படைகள் அடைந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.
லோலாப் பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும்; நிகழ்வைக் கண்டுகளித்தமையும் விசேட அம்சமாக இருந்தது.