ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும் வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்கு தானும் போட்டியிட விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஒரு வெற்றிடம் ஏற்பட்டால், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தயார் என பிபிசி இடம் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் 2019 ஆம் ஆண்டு இருந்த நிலைக்குத் திரும்ப ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க தனது கட்சிக்கு பொருளாதாரத் திட்டம் இருப்பதாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த அவருக்கு ஜனாதிபதி ஆக வேண்டும் எனில் ஆளும் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.