ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதத்தை கையளிக்காவிடின் அவர் பதவியில் இருந்து விலகியதாக கருதி மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ தமது பதவி விலகல் கடிதத்தை நேற்றைய தினத்திற்குள் அனுப்பிவைப்பதாக தொலைபேசி ஊடாக தமக்கு அறிவித்ததாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாம் இந்த சந்தர்ப்பத்தில் பாரிய அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் நாளைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாகவும் நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.