ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக அறிவித்துக்கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான அவர்களின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக ஒவ்வொருவருடனும் கலந்துரையாடப்படும் என வீரவன்ச கூறினார்.
அதன்படி ஒவ்வொரு வேட்பாளர்களின் தனிப்பட்ட திட்டத்தை பரிசீலித்து இறுதியாக ஒருவர் அறிவிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
கட்சியின் தலைவர் டலஸுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பொதுச் செயலாளர் பதில் ஜனாதிபதிக்கு ஆதரவை அறிவித்தமை தொடர்பாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.
இதற்கிடையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு டலஸ் அழகப்பெரும சம்மதித்தால் மாத்திரமே அவரை பரிசீலிப்போம் என அத்துரலியே ரத்தின தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு வேட்பாளர்கள் தொடர்பான பிரச்சினையில் ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.