பிரித்தானியாவின் அடுத்த பிரதமைரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையேயான முதல் தொலைக்காட்சி விவாதம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
கன்சர்வேட்டிவ் தலைமைப் போட்டியில் மீதமுள்ள ஐந்து வேட்பாளர்களும் சேனல் 4 தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர்.
இந்த விவாவதத்தின் போது, பொதுச் சேவைகளுக்கு நிதியளிப்பது மற்றும் பணவீக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து போட்டியாளர்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ், முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக்கின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட வரி உயர்வுகளை தவறு என்று தாக்கி, அவற்றை திரும்பப் பெறுவதாக உறுதியளித்தார்.
ஆனால், சுனக் அவர்கள் தேசிய சுகாதார சேவைகளுக்கு நிதியளிக்க வேண்டும் என்று கூறினார்.
போரிஸ் ஜான்சன், டிரான்ஸ் உரிமைகள் மற்றும் அரசியலில் நம்பிக்கை ஆகியவற்றிலும் போட்டியாளர்கள் சண்டையிட்டனர்.
160,000 டோரி உறுப்பினர்கள் தபால் வாக்கெடுப்பில் கட்சியின் அடுத்த தலைவரைத் தீர்மானிக்கும் முன், டோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் இரண்டு இறுதிப் போட்டியாளர்களாக களமிறங்குவார்கள்.