சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பரப்பப்பட்டு வருவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில பயனர்கள் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் முறைகள் தொடர்பாக உறுப்பினர்களை நேரடியாக அச்சுறுத்தியுள்ளனர்.
எனவே அவர்களை அச்சுறுத்தும் வகையில் இடுகைகளை செய்வது, அதனை பரப்புவது மற்றும் வெளியிடுபவர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி டி.ஐ.ஜியின் கீழ் இயங்கும் கணினி பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.