இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழைந்ததா என்பதை கண்டறிய வேண்டும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் பதிவான மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 6 இலட்சத்து 64 ஆயிரத்து 414 ஆக பதிவாகியுள்ளது.