பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள சில முஸ்லிம் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்பாக மெத்தனமான கொள்கையை கடைப்பிடிக்குமாறு பதில் ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
தடை செய்யப்பட்டுள்ள சில அமைப்புக்கள் இலங்கைக்கு முதலீடுகளை கொண்டு வந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக செயற்பட்ட அமைப்புக்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.