வீதி அனுமதிப்பத்திரம் உள்ள பேருந்துகளுக்கு அருகில் உள்ள டிப்போக்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைச்சில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், உரிமம் பெற்ற மற்றும் பொதுப் போக்குவரத்து பேருந்துகளுக்கு அவை இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க முடிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
எரிபொருள் விநியோக நடவடிக்கையின் ஆரம்பத்தில் பொது போக்குவரத்திற்கு முன்னுரிமை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.