ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம்(21) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
இருவருக்கும் இடையில் நட்பு ரீதியாகவும் நேர்மையாகவும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காது தேசிய ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற குழுக்கள் முறைமையினை பலப்படுத்துவதற்கு இதன்போது முன்மொழியப்பட்டதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
Met with President @RW_UNP at the party leaders’ meeting today. Had a cordial and frank exchange of ideas. Reiterated the opposition’s determination to provide constructive support to avert misery and disaster.
— Sajith Premadasa (@sajithpremadasa) July 21, 2022