அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து முன்னாள் முதலமைச்சரின் மறைவுக்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘லார்ட் ட்ரிம்பிளின் மரணத்தால் தானும் அவரது மனைவியும் ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாகக் கூறினார்.
அவரது வாழ்நாள் சேவை வடக்கு அயர்லாந்தில் அமைதியைக் கொண்டுவர உதவியது என்றும் லார்ட் டிரிம்பிள், தைரியம் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
77 வயதில் நேற்று (திங்கட்கிழமை) காலமான டிரிம்பிள், 1995ஆம் மற்றும் 2005ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சியை வழிநடத்தினார்.
1998 புனித வெள்ளி ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தையில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
இதன்பலனாக 1998ஆம் ஆண்டு பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேறியது. மேலும் அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என்று போற்றப்பட்டார்.
அப்பகுதிகளில் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறையில் சுமார் 3600 பேர் உயிரிழந்தார்கள்.
இதற்காக லார்ட் டிரிம்பிள் மற்றும் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி தலைவர் ஜான் ஹியூமுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. லார்ட் டிரிம்பிள் 2006ஆம் ஆண்டு முதல், ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் அமர்ந்தார்.
புனித வெள்ளி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நிறுவப்பட்ட புதிய வடக்கு அயர்லாந்தின் நிர்வாகத்தில் முதல் அமைச்சராகப் பணியாற்றிய முதல் நபர் இவர்தான்.