பாகிஸ்தானில் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், பாகிஸ்தானில் உள்ள சீன எரிசக்தி நிறுவனங்கள், மலிவு விலையை உறுதி செய்வதற்காக தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு வாரத்திற்குள் விலை குறைப்புக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், நிலக்கரி இறக்குமதியை நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஜூலை முதல் வாரத்தில் தலிபான்கள் நிலக்கரியின் விலையை 30 சதவீதம் உயர்த்தின. இதனையடுத்தே சீன நிறுவனங்கள் ஆப்கானிஸ்தான் நிறுவனங்களை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளன.
உலகச் சந்தைகளில் நிலக்கரி விலை அதிகரித்து வருவதால், ஆப்கானிஸ்தானின் நிதி அமைச்சகம் நிலக்கரியின் ஒரு தொன்னுக்கான விலையை 90 அமெரிக்க டொலரில் இருந்து 200 டொலராக உயர்த்தியுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷேபாஸ் ஷெரீப்பின் கூற்றுப்படி, தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தானில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதன் மூலம் பாகிஸ்தான் இரண்டு பில்லியன் டொலர்களுக்கு மேல் சேமிக்கும்.
சீன நிறுவனமான, ஹுனாங் சான்டோங் ரூயாய் இன் கூற்றுப்படி, பாகிஸ்தான் மக்கள் முன்னதாக மலிவு விலையில் மின்சாரம் பெற்றனர், இருப்பினும் பாகிஸ்தான் ரூபாவுக்கு எதிராக அதிகரித்து வரும் டொலரின் பெறுமதி காரணமாக தாக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், எரிபொருள் விலைகளும் உயர்வடைந்துள்ளன’ என்றுள்ளது.
இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆப்கானிஸ்தான் நிலக்கரி குறைந்த விலையில் கிடைப்பதற்கு ஒப்புதல் அளிக்குமாறு கோரி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், நேப்ரா ஒப்புக்கொண்ட விலை நிர்ணய பொறிமுறையை ஒரு வாரத்திற்குள் அங்கீகரிக்காவிட்டால், ஆப்கானிஸ்தான் நிலக்கரி இறக்குமதியை நிறுத்துவதாக சீன நிறுவனம் அச்சுறுத்தியுள்ளது.
வர்த்தக செயலாளர், செயற்பாட்டு முறைமை பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் நடைபெற்றது, அங்கு ஆப்கான் நிலக்கரியின் விலை தென்னாப்பிரிக்க நிலக்கரி விலையை விட மலிவாக இருக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது இதனையடுத்து பணம் செலுத்தப்படுகிறது என்றார்.
கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட மற்றொரு விடயம் என்னவென்றால், மின்சாரம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பதால், முதலில் முதல் 12 இறக்குமதியாளர்களை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும், இதனால் ஏலத்தை அவசரமாக முடிக்க முடியும். ஆப்கானிஸ்தான் நிலக்கரியின் விலை சிக்கலைச் சமாளிப்பதற்காக ஆகஸ்ட் மாதத்தில் பொது ஏலம் நடத்தப்படும் என்று மேலும் தெரிவித்தார்.
ஏற்கனவே அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் சீரழிந்து வரும் பொருளாதாரத்தின் சுமையின் கீழ் இருக்கும் பாகிஸ்தானிய மக்களை மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்த தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எரிபொருள் விலை அதிகரிப்பு, கொள்ளளவு செலவு மற்றும் பாகிஸ்தான் ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியின் தாக்கம் ஆகியவை மின் கட்டண உயர்வுக்கான காரணங்களாக கூறப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகள் மற்றும் மின்சார விநியோக நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அடிப்படை மின் கட்டணம் அலகு ஒன்றுக்கு 16.91 ஆக உள்ளநிலையில் உதிர்வரும் காலத்தில் அலகொன்றுக்கு 7.9078 அதிகரிக்கப்படவுள்ளது.
எனினும் பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் மோசமடைந்தால் அலகொன்றுக்கு 24ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.