அரசியல் அதிகாரம். அரசியல் ஊழல் நிலச்சுரண்டல், பணச்சுரண்டல், தமிழின அடக்கு முறைக்கு எதிராக குரல்கொடுத்த என்னை ராஜபக்ச அரசாங்கம் அவர்களின் அதிகாரம் என்னை மிக பயங்கரமாக பழிவாங்கியுள்ளது.
இருந்த போதும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து செயற்படுவேன் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2021 ஆண்டு மே மாதம் 3 ம் திகதி இணையத்தளங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 15 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (29) நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து சிறையில் இருந்து இரவு 8.00 மணிக்கு வெளியில் விடப்பட்டபோது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.
“என்னிலை வந்தாலும் எங்கள் தமிழர் உணர்வாளர் அமைப்பு தன்னிலைமாறாது அடக்கு முறைக்கு எதிரான தார்மீக போராட்டம் நிச்சயமாக தொடரும், ஏன் என்றால் 15 மாதங்கள் சிறையிலே நாங்கள் வாழப்பழகிக் கொண்டோம்.
ஆகவே சிறைச்சாலை அடக்குமறையை நாங்கள் எள்ளவு கூட கவலை கொள்ளப் போவதில்லை எங்களுடைய தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக தமிர் உணர்வாளர் அமைப்பு தொடர்ந்து செயற்படும்.
பயங்கரவாத தடைச் சட்டம் ராஜபக்ச அரசாங்கம் தங்களுடைய எதிரிகளை அடக்குவதற்காக தங்களுக்கு எதிரானவர்களை சிறையில் அடைப்பதற்காக அந்த சட்டத்தை கையாண்டு கொண்டிருக்கின்றனர் அது தான் நடந்து கொண்டிருந்தது இதுவரையும்
எனவே தற்போது எந்த சிங்கள அரசியல் தலைவர்கள் வந்தாலும் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்காது அது தான் உண்மையான விடையம்” என்றார்